எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் எரிபொருள் நிரப்பு ஊழியருடன் ஏற்பட்ட முரண்பாடு சுமார் ஒரு வருட கால பகுதிக்கு மேல் நீடித்து வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (10) வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய கால பகுதியில் எரிபொருள் நிரப்புவது தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டது.

முரண்பாடு அக்கால பகுதியில் அங்கிருந்தவர்களால் தீர்த்து வைக்கப்பட்ட போதிலும் , இருவருக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்ட வந்துள்ளது.

இந்நிலையில் , நேற்றைய தினம் இரவு இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு , வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அதனை அடுத்து அவ்விடத்தில் இருந்து சென்ற இளைஞன் முகமூடி அணிந்த கும்பல் ஒன்றுடன் வந்து , எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது.

அதனை தடுக்க சென்ற ஊழியரின் சகோதரர்கள் இருவர் மீதும் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version