நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகுசேவையின் நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (14) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்பவர்களின் வசதிக்கேற்ப வடதாரகை பொது போக்குவரத்து நேர ஒழுங்கு மாற்றப்பட்டமையால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர்.
இதன்போது நெடுந்தீவுக்கு செல்லவிருந்த மக்கள், வயோதிபர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர்.
அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் என பலரும் வடதாரகை படகில் பயணத்தை மேற்கொண்ட நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்படையினரின் விசேட படகில் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.