மல்சிறிபுர பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி நபர் ஒருவர் இன்று (18) காலை குருநாகல் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

55 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாருக்கு எதிராக கோஷமிட்ட தாகவும், நீதிமன்றத்தின் கூரையில் ஏறியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து குறித்த நபரை பெரும் பிரயத்தனத்திற்கு பின்னர் கூரையிலிருந்து கீழே இறக்கினர்

சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் தமக்கு எதிராக மல்சிறிபுர பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவத்தை காண ஏராளமான பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version