எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளிவருவதுபோன்று…. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்
மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இது எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பண்டைய மாயன் கலாச்சாரத்தின் தாயகமாக கருதப்படுகிறது.
இந்நாட்டில் உள்ள ஒரு எரிமலைக்கு அருகே தோன்றிய பெரிய மின்னலை காட்டும் அற்புதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜூலை 10-ம் தேதி ஆன்டிகுவா நாட்டிலிருந்து படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
¡Espectacular!
Video captado en la ciudad Colonial de La Antigua Guatemala. pic.twitter.com/hpnXm1ZJQH
— Vinicio Gutierrez (@viniciogutierr3) July 11, 2023
அகுவா எரிமலையின் மேல் தோன்றும் இந்த மின்னல், பார்ப்பதற்கு எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளி வருவது போல் தெரிகிறது. இக்காட்சிகள் 3.23 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 4,000 லைக்குகளைக் குவித்துள்ளது.
எரிமலை வெடித்து வெளிப்படும்போது சிதறும் பாறை மற்றும் கல் துண்டுகள் டெஃப்ரா எனப்படும். இந்த எரிமலை கடின தீக்குழம்பு மற்றும் டெஃப்ரா ஆகியவற்றின் பல அடுக்குகளால் உருவாகிறது.
இதனால் இது எரிமலை வகைகளில் ஸ்ட்ராட்டோ அல்லது கலவை எரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிமலையின் உயரம் 12,340 அடியாகும். வீடியோவில் இந்த மின்னல் தாக்குதல், அதன் மேலே உள்ள முழு வானத்தையே ஒளிரச் செய்வது போல் தோன்றுகிறது.