யாழ். வலி. வடக்கு பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமியுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுவந்த சிறிய தந்தை வியாழக்கிழமை (20) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமியின் தந்தை கடற்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தந்தை இரவு கடற் தொழிலுக்கு செல்லும் வேளை குறித்த வீட்டுக்குச் செல்லும் தந்தையின் சகோதரனான சிறிய தந்தை சிறுமியுடன் பாலியல் சேட்டை யில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறித்த பகுதியில் சிறுவர் பெண்கள் பிரிவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில், குறித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை உத்தியோதர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் சந்தேக நபரான சிறிய தந்தையை கைது செய்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version