அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் அவரது பெண் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை அகுருவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வரகாகொட சல்காஸ் மாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று சனிக்கிழமை (22) காலை அங்குருவாதோட்ட பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சில்வா தலைமையிலான குழுவினர் அங்கு திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரைப் பொலிஸார் கைது செய்ய முயற்சித்தபோது சந்தேக நபர் பெரியளவிலான கத்தரிக்கோல் போன்ற கூரான ஆயுதத்தால் பொலிஸ் பொறுப்பதிகாரியை பல தடவைகள் தாக்க முற்பட்ட போதும், அவரது முயற்சி தோல்வியடைந்தமையால் அவர் தனது மார்பில் பல தடவைகள் கத்தியால் குத்திக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.