தபால் அட்டை 1969-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி பாரீஸ் நகரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. தவறாக தனது முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதினார்.

இன்டர்நெட், இ-மெயில், சமூக வலைதளங்களின் அசூர வளர்ச்சி காரணமாக தபால் அட்டைகள் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது.

இந்நிலையில் 1969-ம் ஆண்டு பாரீஸ் நகரில் இருந்து அமெரிக்காவில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட தபால் கார்டு 54 வருடங்கள் கழித்து வினியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த தபால் அட்டை 1969-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி பாரீஸ் நகரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 12-ந்தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள போர்ட்லென்ட் பகுதியில் வசிக்கும் ஜெசிகா மீன்ஸ் என்ற பெண்ணின் வீட்டில் உள்ள அஞ்சல் பெட்டியில் இருந்துள்ளது.

இதை பார்த்த அவர் தவறாக தனது முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதினார்.

ஆனாலும் 54 வருடங்கள் கழித்து கிடைத்தது எப்படி? என்பதும், அந்த போஸ்ட் கார்டில் புதிய முத்திரை இருந்தது எப்படி? என்பதும் மர்மமாக இருப்பதாக கூறி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version