யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிறாயன் ஊடக்வே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமை (25) சென்றிருந்தார்.அவருடன் யாழ் மாவட்ட குரு முதல்வரும் வந்திருந்தார்.

மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் இன்றைய தினம் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு வருகை தந்தேன் என இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி நல்லூர் ஆலயமுன்றலில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி இன்று நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை வழிபட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version