அம்பாறை – திகவாபி பிரதான வீதியின் மாணிக்கமடு பாலத்திற்கு அருகில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன் போது மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த நபர் வலது காலில் காயமடைந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை போக்குவரத்து பொலிஸார் வீதி சமிக்ஞைக்கு அருகில் நிறுத்துமாறு உத்தரவிட்ட போதும் மோட்டார் சைக்களில் பயணித்த இருவரும் அதனை பொருட்படுத்தாது பயணிக்க முற்பட்ட போது பொலிஸார் அவர்களை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version