ரம்புக்கன பரபே, இஹலகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் இரவு நேரத்தில் நுழைந்து அங்கிருந்த 60 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கட்டி வைக்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டார் என ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கனை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் இந்த சார்ஜன்ட் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

24 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் கேகாலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version