சூடான் நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போரிலிருந்து உயிர்தப்பி, தங்களையும் தங்கள் உறவினர்களையும் பாதுகாக்க, பலர் அண்டை நாடான சாட் (Chad) நாட்டுக்குச் செல்கின்றனர்.

இரு நாடுகளின் எல்லையிலிருக்கும் ஆட்ரே எனும் நகரத்தில் அமைந்திருக்கும் முகாமுக்குச் சூடானிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

ஆண்கள் அதிக எண்ணிக்கையில் தப்பி வருவதில்லை. அவர்கள் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள், அல்லது படைகளால் தாக்கப்படுகிறார்கள்.

இந்தக் கூடாரங்களில் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட குண்டடிப்பட்ட காயங்கள் உள்ளன.

அப்படித் தப்பி வந்த கர்ப்பிணியான அராஃபா அதூம் என்ற பெண், வரும் வழியிலேயே யாருடைய உதவியுமின்றிச் சாலையிலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதற்குமுன் அவரது ஏழு குழந்தைகளில் மூவர் போரில் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்.

இப்போது பிறந்திருக்கும் இந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்பதே அராஃபாவின் எதிர்பார்ப்பு.

Share.
Leave A Reply

Exit mobile version