யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் புதன்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டுவில் வடக்கைச் சேர்ந்த தம்பையா சரோஜினி (வயது 82) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் பொருட்கள் சிதறி கிடைப்பதனா, மூதாட்டியின் தலைப்பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர் .
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.