புதிதாக திருமணம் செய்து கொண்ட இளைஞன் முன்னாள் காதலி வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று மதவாச்சியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விருவரும் மதவாச்சி பகுதியிலுள்ள விடுதி அறையொன்றில் நேற்று முன்தினம் (1) தங்கியிருந்த போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளைஞனை அந்த யுவதி வெட்டியுள்ளார். அத்துடன், அந்த யுவதி அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு நோய்வாய்ப்பட்டுள்ளார்.

இவ்விருவரும் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகஹருவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன், பொலன்னறுவை செவணபிட்டிய பகுதியைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியுடன் மதவாச்சியில் விடுதியொன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரவிக்கின்றனர்.

காதலன் சில தினங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை தாமதமாக அறிந்து கொண்ட காதலி அவரை சந்திக்க வந்த போது பையில் கத்தியை வைத்து எடுத்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விடுதியின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் சம்பவத்தை அறிந்து இவ்விருவரையும் உடனடியாக வைத்தியசாரையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version