யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டின் தளபாடங்கள் மற்றும் ஜன்னல்கள் சேதமாக்கியுள்ளதுடன், தங்கி இருந்த மாணவர் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version