களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (1) காலை வடிகாணிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் 70 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நேற்று திங்கட்கிழமை (31) அல்லது அதற்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (30) வெளிநோயாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version