மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொடர் மின்சார விநியோகத்திற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (02) அறிவித்தது.

மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய கப்பல் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் விடயத்தை துரிதப்படுத்தினால், மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version