திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரக்கட்டையில் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் தோப்பூர், 7 ஆம் வட்டாரம், இக்பால் நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் முஹம்மது அன்சார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version