அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் லஸ்டின் இமானுவேல். மசாஜ் ஊழியரான இவருக்கு 28 வயதாகிறது. சமூக ஊடகங்களில் பிரபலமானவராக திகழும் இவர் கடந்த 31-ந்தேதி 10 இளம்பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமண விழாவை அவர் கடற்கரையில் தனது 10 மனைவிகளுடன் சேர்ந்து கொண்டாடி உள்ளார். மேலும் இதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர் இன்று, 10 பெண்களை திருமணம் செய்து கொண்டேன். அனைவரும் தற்போது என் மனைவிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், லஸ்டின் இமானுவேலை 9 இளம்பெண்கள் வெள்ளை நிற ஆடையில் கையில் பூங்கொத்துடன் சுற்றி வருகிறார்கள். ஒரே ஒரு இளம்பெண் மட்டும் அவரது மடியில் அமர்ந்திருப்பது போன்று காட்சிகள் உள்ளது.

வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version