மினிபே, ஹசலக்க, மொராய பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த சிறுமியைத் தாக்கிய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இந்த மாணவி, மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பேஸ்புக் ஊடாக குறித்த நபருடன் அறிமுகமான மாணவி சந்தேக நபருடன் ஒரு வருட காலமாக தொடர்பில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி தன்னுடனான உறவை நிறுத்தியதால் கோபமடைந்து தான் தாக்கியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.