பெண் ஒருவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் கடத்த முயன்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம பகுதியில் பெண் ஒருவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரில் கடத்திச் சென்றபோதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக பண்டாரகம பிரதேசத்தில் 37 வயதுடைய பெண் ஒருவரையும் அவரது 15 மற்றும் 7 வயதுடைய இரண்டு பிள்ளைகளையும் கடத்த முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகமவில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டுக்கு காரில் வந்த இருவர், மூவரையும் குறித்த வாகனத்தில் ஏறுமாறு கூறி அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, தாய் தனது இரு பிள்ளைகளுடன் காரில் ஏறிச் சென்றுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version