யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகியுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version