செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

விஷால் நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  சில நாட்களாக நடிகர் விஷால் – நடிகை லட்சுமி மேனன் இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து விஷால் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “பொதுவாக என்னைப் பற்றிய வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை.

அப்படி செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என்று பரவி வரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

பட இயக்குனர் என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண்.

நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து அவருடைய அடையாளத்தை கெடுக்கிறீர்கள்.

ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல.

நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version