நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.

 இந்நிலையில், விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் படம் நன்றாக இல்லை என்றும் ‘சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க’ என்றும் கூறியதால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கதையை ரஜினியிடம் கூறுமாறு விஜய் சொன்னதாக நெல்சன் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version