எம்.ஜி.ஆர் படத்தில் பாட வாய்ப்பு கிடைக்குமா என்று பல பாடகர்கள் ஏங்கி வந்த காலத்தில், ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அவரிடமே பாடகர் டிஎம்எஸ் கேட்டது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டிஎம் சௌந்திரராஜன். சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த இவருக்கு, 1950-ம் ஆண்டு வெளியான மந்திர குமாரி என்ற படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் தனது குரல் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்த டிஎம்எஸ், ராமநாதன் தொடங்கி, இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இதில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ் ஆகியோருடன் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

தெய்வக பாடகர் என்று புகழ் பெற்ற டிஎம்எஸ் பல பக்தி பாடல்கள் மூலமும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ளார்.

மேலும் எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கிய முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள டிஎம்எஸ் எம்.ஜி.ஆருடன் மோதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1969-ம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் அடிமைப்பெண்.

எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்த இந்த படத்தில் வரும் ஆயிரம் நிலவே என்ற பாடலை அப்போது வளர்ந்து வரும் பாடகராக இருந்த எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடியிருந்தார்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஆனால் இந்த பாடலை முதலில் பாட இருந்தது டி.எம்.எஸ் தான்.

ஆனால் அப்போது அவரின் மகள் திருமணம் இருந்ததால் தான் மதுரைக்கு போய்ட்டு வந்து பாடுவதாக கூறியிருந்தார். அப்போது எம்.ஜி.ஆர் நான் சொல்றேன் நீங்கள் பாடி கொடுத்துட்டு போங்க என்று சொல்லியிருக்கிறார்.

இதை கேட்ட டிஎம்எஸ் இல்லை சார் உங்கள் அவசரத்திற்கு என்னால் ஈடுகொடுத்து எதுவும் செய்ய நீங்கள் வேறு யாரையாவது பாட வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

அதன்பிறகு தான் இந்த பாடலை எஸ்பிபி பாடியிருந்தார் பாடலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு எஸ்பிபிக்கு இவருக்கும் இடையே போட்டி டிஎம்எஸ் அவரை போட்டியான நினைத்தார் என்று பல செய்திகள் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை.

உண்மையிலேயே ஆயிரம் நிலவே பாடலக்காக எஸ்பிபிக்கு டிஎம்எஸ் பாராட்டு தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு எஸ்பிபி வைத்தே அந்த படத்தின் அனத்து பாடல்களையும் பாட வைத்தார்கள். ஆனால் ஆயிரம் நிலவே பாடலை தவிர மற்ற எந்த பாடலும் எம்.ஜி.ஆருக்கு திருப்திகரமாக இல்லை.

அதனால் தாயில்லாமல் நானில்லை என்ற பாடலில் சரியான டோன் வரவில்லை என்று கூறி டி.எம்.எஸ் திரும்பி வந்தவுடன் அவரை பாட வைக்க அனுகினார்கள்.

இந்த பாடலை பாட ஒப்புக்கொண்ட டிஎம்எஸ் ஒரு கண்டிஷன் என்று கூறி ஒரு பாட்டுக்கு ரூ1000 கொடுத்தால் தான் பாடுவேன் என்று சொல்லிவிட்டார்.

அதை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் அதன்பிறகு அவருக்கு ஒவ்வொரு பாடலுக்கும் ரூ1000 சம்பளம் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்றுளள் 6 பாடல்களில் தாயில்லாமல் நானில்லை, ஏமாற்றாதே, உன்னை பார்த்து உள்ளிட்ட 3 பாடல்களை டி.எம்.எஸ் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version