மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டமையால் தற்போது முட்டை விற்பனை வலையமைப்பு வலுவடைந்து வருவதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1,250 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.