யாழ்ப்பாணம் அபுபக்கர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதே பிரதேசத்தை சேர்ந்த கனகசபை பால்ராசா என்பவரே உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

இவர் கடந்த வியாழக்கிழமை (10) இரவு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது கீழே விழுந்துள்ளார்.

அதனையடுத்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று சனிக்கிழமை (12) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version