ரம்புக்கனை பத்தம்பிட்டிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விஷம் அருந்தியதால் இன்று திங்கட்கிழமை (14) காலை மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கனை பத்தம்பிட்டிய கிராமத்தில் வசிக்கும் 28 வயதுடைய தந்தை, 27 வயதுடைய தாய் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் ஆகியோரே மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தாய், தந்தை இருவரும் வீட்டில் இருந்த தமது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாமும் அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர்கள் வீட்டில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்ட அயலவர்கள், அவர்கள் நால்வரையும் முச்சக்கரவண்டியில் கொண்டு சென்று, மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோரே விஷம் கொடுத்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version