சிட்னியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தின் பயணியொருவர் இஸ்லாமை குறிப்பிட்டு ஆபத்தான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதால் விமானம் நடுவானில் மீண்டும் சிட்னிக்கு திருப்பப்பட்டது.

எம்122 விமானம் 194 பயணிகள் ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்ட சில நிமிடத்தில் முதுகுப்பையுடன் காணப்பட்ட நபர் எழுந்து நின்று நான் இஸ்லாமின் அடிமை என சத்தமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய விமானப்பாதுகாப்பு படையினர் அவரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் தற்போது ஓடுபாதையில் காணப்படுகின்றது – விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

சம்பவத்தை கையாள்வதற்கு அவுஸ்திரேலிய சமஸ்டி பொலிஸாருக்கு உதவுவதாக விமானநிலைய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விமானநிலையத்தின் அவசரசேவை பிரிவினருக்கு உதவிவருகின்றோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version