தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவும் பாதிக்கப்பட்டுள்ளதால் வனவிலங்குகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக பவுஸர்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு சிறிய குளங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யால தேசிய பூங்கா ஊடாக பாயும் மாணிக்க கங்கையில் இருந்து நீர் எடுக்கப்பட்டு பவுஸர்கள் மூலம் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டு வன விலங்குகள் தண்ணீர் அருந்தும் இடங்களில் விடப்படுகிறது.

மேலும், பூங்காவிலுள்ள வறண்டு கிடக்கும் தொட்டிகளுக்கு சோலார் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்னறனர்.

யால தேசிய பூங்காவிற்கு தற்போது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், எனவே சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளைப் பார்ப்பதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளாந்த வருமானம் 80 இலட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version