தூரப் பய­ண­மொன்று போவ­தற்­காக பஸ் தரிப்பிடத்திற்கு வரும்­போது சில வேளை­களில் அப்­போ­துதான் பஸ் புறப்­பட்­டுப்­போன அனு­பவம் பல­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்கும்.

கொஞ்சம் முதல்தான் போன­தென்றால் யாரு­டை­யதாவது மோட்டார் சைக்­கிளில் கலைத்துச் சென்று அதைப் பிடித்த அனு­ப­வங்­களும் சில­ருக்கு இருக்கும்.

ஆனால், நேற்­று போக­வேண்­டிய பஸ்ஸைப் பிடிக்க இன்­றைக்கு பஸ் தரிப்பிடம் போனால் எப்­படி இருக்கும்?

நேற்­றைக்கு என்­றாலும் பர­வா­யில்லை. ஒரு மாதமோ, அல்­லது வரு­டமோ, அல்­லது சில வரு­டங்­க­ளுக்கு முன்­னரோ போன பஸ்ஸை பிடிக்க இப்­போது போனால் எப்­ப­டி­யி­ருக்கும்?

அதுவும் 36 வரு­டங்­க­ளுக்கு முன்னர் போன பஸ் என்றால்…?

36 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமுல்­ப­ப­டுத்­தப்­பட்ட 13ஐ, அப்­போது கெட்­டி­யாகப் பிடிக்­காமல் கோட்டை விட்­டு­விட்டு, இப்­போது அதைப் பிடிப்­ப­தற்கும் பல்­வேறு நிபந்­த­னைகள் போட்­டுக்­கொண்­டி­ருக்கும் நம் தமிழ்த் தேசிய அர­சியல் தரப்­புக்­களைப் பார்க்க இப்­ப­டித்தான் நினைக்கத் தோன்­று­கி­றது. அந்த பஸ்ஸை மாத்­தி­ர­மன்றி, அதன் பின்னர், கிட்­டத்­தட்ட சமஷ்டி என்றே சொல்­லக்­கூ­டிய இன்னும் கூடுதல் அதி­காரப் பகிர்வை வழங்­கிய முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­ய­காவின் அதி­காரப் பகிர்வு பஸ்­ஸையும் தமிழ்த் தரப்­புக்­களின் திமிர்த்­த­னத்தால் தவ­ற­விட்­டனர்.

அதன் பின்னர் நோர்வே அனு­ச­ர­ணை­யுடன், சர்­வ­தேச ஆத­ர­வுடன் கிடைத்த உள்­ளக சுய­நிர்­ணய உரிமை அடிப்­ப­டை­யி­லான தீர்வு’ குறித்துப் பரி­சீ­லிக்கும் வாய்ப்பைத் தந்த பஸ்­ஸையும் தவ­ற­விட்­டா­யிற்று. இப்­ப­டியே எல்லா பஸ்­களும் போன பின்னர், இவை எல்­லா­வற்­றுக்கும் முன்னால் போன 13ஐத் துரத்­திப்­பி­டிக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை­மைக்கு தமிழ் மக்கள் இன்று தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

1987இல் இழந்­தது

அப்­போது 13ஆம் திருத்தச் சட்­டத்­தின்­படி இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்ட 9 மாகாண சபை­களில், தமி­ழர்கள் தாம் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பிர­தே­சங்கள் என்று கூறி, தமி­ழீழம் என்று எல்லை வரை­ய­றுத்துக் கன­வு­ கண்ட வடக்­கு-­, கி­ழக்கு மாகா­ணங்­களை இணைத்து ஒரே மாகாண சபை­யாக வழங்­கி­ய­போது அதை ஒரு­ சாரார் வேண்டாம் என்­றனர். சவா­லாக பொறுப்­பேற்­ற­வர்­களும் அதைச் சரி­யாகப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளாமல் இடை ­வ­ழியில் போட்­டு­விட்டுச் சென்­றனர்.

இணைந்த மாகா­ண­சபை மட்­டு­மன்றி, 13ஆம் திருத்தச் சட்­டத்தை உரு­வாக்கக் கார­ண­மாக அமைந்த இந்­தி­ய–-­இ­லங்கை உடன்­ப­டிக்­கை­யின்­படி, வடக்கு, கிழக்­கி­லுள்ள இரா­ணுவ முகாம்­க­ளை­விட்டு இலங்கை இரா­ணு­வத்­தினர் வெளியே வரக்­கூ­டாது என்ற கட்­டுப்­பாடு வேறு அப்­போது விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதை­விட வேறென்ன வேண்­டு­மென்று அப்­போது அதை தூக்கி எறிந்­தார்கள்?

பின்னர், ஜே.வி.பி. தாக்கல் செய்த ஒரு வழக்கின் மூலம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தனித்­த­னி­யாகப் பிரிக்­கப்­பட்ட நிலையில், முன்பு தும்­புத்­த­டி­யால்­கூட தொட்­டுப்­பார்க்க மாட்டோம் என்று சொன்ன மாகாண சபை­களைக் கைப்­பற்ற தேர்­தலில் குதித்­தார்கள் தமிழ்த் தேசியத் தரப்­பினர்.

நியதிச் சட்­டங்கள்

அப்­படிக் கைப்­பற்­றிய வடக்கு மாகாண சபையை 5 வரு­டங்­க­ளாக ஆட்சி செய்தும், மத்­தியின் அதி­கா­ரங்­களை 13ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் மாகா­ணங்­க­ளுக்குப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அவ­சி­ய­மான நியதிச் சட்­டங்­களை ஆக்­கு­வதில் இந்தத் தமிழ்த் தேசியத் தரப்­புக்கள் தேவை­யா­ன­ளவு அக்­க­றையைக் காட்­ட­வில்லை. மாறாக, ஊடகச் செய்­தி­க­ளுக்குத் தவிர வேறெ­தற்கும் உத­வாத அர­சியல் ரீதி­யான தீர்­மா­னங்­களை உணர்ச்சி ததும்ப நிறை­வேற்­றி­ய­துதான் மிச்சம்.

5 வரு­டங்­களில் வெறும் 13 நியதிச் சட்­டங்­க­ளையே (17 என்று சொன்­னாலும், அவற்றில் இரண்டு திருத்­தங்கள், ஏனைய இரண்டு ஒரே விட­யத்தின் மீதா­னவை என்று சொல்­லப்­ப­டு­கி­றது) உருப்­ப­டி­யாக இவர்கள் ஆக்­கி­யுள்­ளனர். அதிலும் பல­வற்றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான ஒழுங்கு விதி­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக இந்­திய ,- இலங்கை உடன்­ப­டிக்­கையின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட மாகா­ண­ச­பை­களில் தமி­ழர்கள் கேட்ட மாகா­ணங்­க­ளான வடக்கு, கிழக்கை விட, மேல் மாகாணம், வடமேல் மாகாணம் என்­பன அதி­க­ள­வான நியதிச் சட்­டங்­களை நிறை­வேற்றி, மத்­தியின் அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்குப் பெற்று அவற்றைச் சிறப்­பாக நிர்­வ­கித்தும் வரு­கின்­றன.

நிர்­வா­கிகள் பற்­றாக்­குறை

13ஆவது திருத்தச் சட்டம் பற்றி இப்­போதும் நாம் அதிகம் பேசிக்­கொண்­டி­ருந்­தாலும், அது 36 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­புக்குள் உள்­வாங்­கப்­பட்­டு­விட்­டது. அதன் பிர­காரம் மாகா­ண­ ச­பைகள் உரு­வாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து மாகாண நிர்­வாக அல­குகள் இயங்­கிக்­கொண்­டுதான் இருக்­கின்­றன.

மக்கள் பிர­தி­நி­தி­களைக் கொண்ட சபைகள் இப்­போது இல்­லா­விட்­டாலும், மாகாண மட்­டத்­துக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட விட­யங்­களில் பெரும்­பா­லா­னவை இப்­போது ஆளுநர், பிர­தம செய­லாளர், மாகாண அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள் மற்றும் அவர்­க­ளின்கீழ் பணி­யாற்றும் அதி­கா­ரி­களால் செயற்­ப­டுத்­தப்­பட்­டுக்­கொண்­டுதான் இருக்­கின்­றன.

உதா­ர­ணத்­துக்கு வட மாகா­ணத்தை எடுத்­துக்­கொண்டால், கல்வி, சுகா­தாரம், விவ­சாயம், உள்ளூராட்சி, மகளிர் விவ­காரம் என்­கின்ற 5 மாகாண அமைச்­சுக்­களின் ஊடாக பெரும்­ப­குதி மாகாண நிர்­வாகம் இப்­போதும் செயற்­ப­டுத்­தப்­பட்­டுக்­கொண்டே இருக்­கின்­றது.

ஆனால், இப்­போ­தி­ருக்கும் பிரச்­சினை என்­ன­வொன்றால், இந்த மாகாண அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­க­ளாக நிய­மிப்­ப­தற்குத் தேவை­யான நிர்­வாகத் தர­முள்ள தமிழ் அதி­கா­ரி­க­ளுக்குப் பெரும் தட்­டுப்­பாடு நில­வு­கி­றது. இலங்கை நிர்­வாக சேவையைச் சேர்ந்த விசேட தர­நி­லை­யி­லுள்ள (Special Grade) தமிழ் அதி­கா­ரி­க­ளையே மாகாண அமைச்­சுக்­களின் செய­லாளர் பத­விக்கு நிய­மிக்க முடியும். ஆனால், அவ்­வா­றான அதி­கா­ரிகள் யாரும் இல்­லாத நிலை­யி­லேயே மாகாண நிர்­வாகம் இன்று காணப்­ப­டு­கி­றது. மாகாண நிர்­வாகம் மாத்­தி­ர­மன்றி, மத்­தியின் நிர்­வா­கத்­துக்குள் இருக்கும் மாவட்டச் செய­லாளர் பதவி நிலை­க­ளுக்கும் உரிய தகு­தி­யுள்ள தமிழ் அதி­கா­ரிகள் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கி­றது.

ஆக, 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் மத்­தி­யி­லி­ருந்து அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­தெ­டுப்­ப­தற்கு அவ­சி­ய­மான நியதிச் சட்­டங்­க­ளையும் நிறை­வேற்­றாமல், இருக்­கின்ற அதி­கா­ரங்­க­ளை­யேனும் முழு­மை­யாகப் பயன்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான தர­நி­லையில் அதி­கா­ரி­களும் இல்­லாத நிலை­யி­லேயே குறிப்­பாக இன்­றைய வடக்கு மாகாணம் காணப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலையில், கூடுதல் அதி­கா­ரங்கள் கிடைத்­தாலும் அவற்றைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யாத ஒரு நிலை­யி­லேயே இன்று தமி­ழர்கள் இருக்­கி­றார்கள். இந்த நிலையில், 13க்கும் மேலே சென்று சமஷ்­டியைக் கேட்டுப் பெற்­றாலும் அதை எவ்­வாறு நாம் நடை­மு­றைப்­ப­டுத்தப் போகிறோம்?

மாறி­விட்ட பூகோள அர­சியல்

1987 ஆம் ஆண்டு இந்­திய, – இலங்கை உடன்­ப­டிக்கை செய்­து­கொள்­ளப்­பட்ட காலத்தில் இருந்த இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்தை மையப்­ப­டுத்­திய பூகோள அர­சியல் சூழ்­நிலை இப்­போது முற்­றிலும் மாறி­விட்­டது.

1977இல் ஜனா­தி­ப­தி­யான ஜே.ஆர். ஜய­வர்­தன கடைப்­பி­டித்த திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கையும், மேலைத்­தேய நாடு­க­ளுக்கு இலங்­கையில் அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்த வெளி­யு­றவுக் கொள்­கையும் பிராந்­திய வல்­ல­ர­சான இந்­தி­யா­வுக்கு ஏற்­ப­டுத்­திய சவால்­களே அப்­போது உரிமை கேட்டுப் போராடப் புறப்­பட்ட தமிழர் தரப்­பின்­மீது இந்­தி­யாவின் கரி­சனை ஏற்­ப­டு­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­தது. தனி­நாடு – தமி­ழீழம் என்று வட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் நிறை­வேற்றி உசுப்­பேற்­றிய அர­சி­ய­லுக்குள் உணர்ச்­சி­வ­சப்­பட்டு எடு­பட்ட தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்ட நாட்­டத்தை தனது பிராந்­திய அர­சியல் நல­னுக்­கேற்ப இந்­தியா கையாண்­டது.

இதன் விளை­வாக தீவிரம் பெற்ற தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்­டத்தின் ஒரு கட்­டத்தில், தமிழர் பிர­தே­சங்­களில் ஏற்­பட்ட இலங்கை இரா­ணுவ நகர்­வு­களின் நெருக்­க­டி­களைப் பயன்­ப­டுத்தி இலங்கை விவ­கா­ரத்தில் தலை­யிட்ட இந்­தியா, ஏற்­க­னவே தயா­ரித்து வைத்­தி­ருந்த மாகா­ணங்­களை மையப்­ப­டுத்­திய அதி­கா­ரப்­ப­கிர்வு திட்­டத்தை இந்­திய, – இலங்கை உடன்­ப­டிக்­கையின் மூலம் இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யதன் மூலம் தான் எடுத்த பொறுப்பை நிறை­வேற்­றவும் முயன்­றது.

ஆனால், இன்­றைய பூகோள அர­சியல் சூழல் அன்­றி­ருந்­த­துபோல் இல்லை. அப்­போது இந்­தியா அச்­சத்­துடன் நோக்­கிய மேலைத்­தே­சத்­துடன் இப்­போது அது கைகோர்த்து நிற்­கி­றது. மாறாக, மேலைத்­தே­சத்­துக்கும் சவா­லாக இருக்கும் சீனாவே இந்­தி­யாவின் பிர­தான அக்­க­றைக்­கு­ரிய விட­ய­மாக இப்­போது மாறி­யி­ருக்­கி­றது. இலங்கை மீதான சீனாவின் செல்­வாக்கைத் தணிப்­ப­தற்கு இலங்கைத் தமி­ழர்­க­ளை­விட தென்­னி­லங்­கையே இப்­போது இந்­தி­யா­வுக்கு அதிகம் தேவைப்­ப­டு­கி­றது.

அத­னால்தான் அண்­மையில் இந்­தியா சென்­றி­ருந்த இலங்கை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்கவுடன் தமிழர் பிரச்­சினை, 13ஆவது திருத்தம் என்­ப­வற்­றை­விட, இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பிணைப்பை (Connectivity) இறுக்­க­மாக்கும் வகையில் திரு­கோ­ண­மலை எண்ணைக் குதங்கள், காங்­கேசன் துறை­முகம், பலாலி விமான நிலையம், தலை­மன்­னா­ருக்­கான கப்பல் சேவை உள்­ளிட்ட விட­யங்­க­ளி­லேயே இந்­தி­யாவின் கவனம் அதிகம் குவிந்­தி­ருந்­தது. தமிழர் பிரச்­சினை மற்றும்13 பற்­றியே இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை ஜனா­தி­ப­தி­யுடன் பேசினார் என்று தமிழ்த் தேசிய அர­சி­யல்­வா­தி­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே, இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் பின்னர் அவர்­களை கொழும்பில் சந்­தித்து ‘தாஜா’ பண்­ணினார்.

ஆக, இலங்கைத் தமிழர் விவ­கா­ரத்தில் கூடுதல் அக்­கறை காட்­ட­வேண்­டிய பூகோள அர­சியல் தேவைகள் இந்­தி­யா­வுக்கு இல்­லா­மல்போய், கிடைத்த மாகா­ண­ச­பைக்கும் மத்­தி­யி­லி­ருந்து அதி­கா­ரங்­களைப் பகிர்ந்துகொள்ளத் தேவையானளவு நியதிச்சட்டங்களையும் உருவாக்காமல், சரி இருக்கின்ற அதிகாரங்களையேனும் பயன்படுத்திக்கொள்வோமே என்றால், அவற்றைச் சரியாகச் செய்து முடிப்பதற்குத் தேவையான தரநிலையிலுள்ள அதிகாரிகளும் இல்லாத நிலையில் இன்று தமிழர் தரப்பு என்ன செய்யப்போகிறது?

இந்த நிலையில் 36 வருடங்களுக்கு முன்னர் தவறவிட்ட 13ஆவது திருத்தச்சட்ட மாகாணசபை பஸ்ஸை ஒருவாறு முழுவதுமாகக் கலைத்துப் பிடித்து உள்ளே ஏறினாலும், அந்த பஸ்ஸை சரியான திசையில் ஓட்டுவதற்குத் தேவையான தராதரமுள்ள சாரதியாகச் செயற்படக்கூடிய அரசியல் தலைமையோ, நடத்துநராகச் செயற்படக்கூடிய போதிய தராதரமுள்ள நிர்வாக அதிகாரிகளோ இல்லாத நிலையில் பயணம் எப்படித் திருப்தியாக அமையும்?

எனவே, பஸ்ஸைப் பிடிக்க முன்னர், பஸ்ஸை கவனமாகவும், பொறுப்புணர்வுடனும், பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்புடனும் செலுத்தக்கூடிய ஆளுமையுள்ள, பொருத்தமான அரசியல் தலைமை(சாரதி)யையும், பயணிகளின் நலன்களை நிறைவேற்றியபடி சாரதிக்கும் சரியாக வழிகாட்டக்கூடிய தரமுள்ள நிர்வாக அதிகாரி(நடத்துநர்)களையும் இனங்கண்டு உருவாக்குவதே இப்போது அவசியமாகிறது.

(கோடீஸ்­வரன் றுஷாங்கன்)

Share.
Leave A Reply

Exit mobile version