ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தலைவர் விதானகே சிறிசோமவின் வீட்டின் மீது குடிபோதையில் இருந்த நபர் இரும்புக்கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
நேற்று இரவு ஏழு மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலில் முன்னாள் மேயரின் மகள் மற்றும் சகோதரி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சில தளபாடங்கள் மற்றும் வீட்டின் கதவுகள் சேதமடைந்துள்ளன.
தாக்கிய நபர் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கியதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேயர் பணியில் இருந்த போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் குறித்த நபர் குடிபோதையில் நிர்வாணமாக வந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் ஆடையின்றி இரும்பு கம்பியை எடுத்துச் செல்வதை, அருகில் இருந்தவர்கள் மொபைல் போனில் பதிவு செய்துள்ளன ர்.
சம்பவத்தையடுத்து உடனடியாக ஹொரணை பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் சந்தேகநபர் இன்று (21) ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.