யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு 8:30 மணியளவில் பதிவானதாக பொலிசார் தெரிவித்தனர்.

முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் உள்ளடங்கிய கும்பல் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததுடன் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, சோக்கேஸ் , சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளதுடன் இருமோட்டார் சைக்கிள்களை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனயைடுத்து இது குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் பொலிசார் இன்று தடயங்களை ஆய்வுசெய்தனர்.

வீட்டிலிருந்த 20 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version