மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் முள்ளிக்கண்டல் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்துள்ளது.