கிளிநொச்சி முரசுமோட்டையில் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விசேட விழிப்புணர்வு நடைபவனியொன்று வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணி முரசுமோட்டை யில் அமைந்துள்ள நவஜீவனம் பகல் பராமரிப்பு நிலைய சிறுவர்கள் பெற்றோர்கள் இணைந்த வகையில் குறித்த பேரணியை நவஜீவனம் பங்குத்தந்தை அருட்பணி புன்னியராஜ் ஆரம்பித்து வைத்துள்ளார்.

குழந்தைகள் பாலியல் பொருட்கள் அல்ல சிறுவர்களை தீய வார்த்தைகளால் பேசுவதை தடுப்போம் சிறுவர்களை மது போதை அடிமையிலிருந்து மீட்போம் வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி ஏ-35 வீதியின் கோரக்கன் கட்டு சந்திவரைச் சென்று நிறைவு பெற்றுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version