மேற்கு ஆபிரிக்க நாடாகிய நைஜரில் நடந்த பின்னணி:

1. திறனற்ற தூய்மையற்ற ஆட்சி

2. எரிபொருள், தங்கம், யூரேனியம் போன்றவை உள்ள நைஜரின் பொருளாதாரத்தை பிரான்ஸ் சுரண்டுவதாக நைஜர் மக்கள் சினமடைந்துள்ளனர்.

3. Global South எனப்படும் தெற்குலகில் 1. சீனா, 2. இரசியா 3. திரண்ட மேற்கு ஆகியவற்றிடையே ஆதிக்கப்போட்டி

4. இஸ்லாமியத் தீவிரவாதம்

5. கால நிலை மாற்றம் உணவு உற்பத்தியை பாதித்தது. கொவிட்-19, உக்ரேன் போர்,

செய்திகள்

1. 99.3% இஸ்லாமியர்களைக் கொண்ட நைஜரில்2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த மொஹமட் பஜௌம்மின் ஆட்சி 2023 ஜூல 26-ம் திகதி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

2. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியை படையினர் புரட்சி மூலம் கவிழ்த்தனர். அதில் இரசியாவின் கை இருக்கின்றது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

அதுவும் வாக்னர் குழு சம்பந்தப்பட்டதாக குற்றச் சாட்டு. Telegram channel என்ற சமூக வலைத்தளத்தில் வாக்னர் குழுவினர் தங்கள் அடுத்த இலக்கு நைஜர் என தகவல்களைப் பரிமாறியிருந்தனர்.

3. 1500 பிரெஞ்சுப் படையினர் நைஜரில் உள்ளனர்.

4. ஏழாவது பெரிய யூரேனியம் உற்பத்தி செய்யும் நாடு.

5. நைஜரில் இரசியாவின் தேசியக் கொடிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவர்கள் மக்கள் இரசியாவை விரும்புகின்றனர். பிரான்ஸ் அங்கு செய்து கொண்டிருக்கும் சுரண்டலே இதற்கு காரணம்.

நைஜர் ஆட்சி மாற்றத்தின் விளைவுகள்

திரண்ட மேற்கு நாடுகளுக்கு பெரும் சவால்.

படையினரின் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நைஜரின் உள்ள அமெரிக்காவின் Nigerien Air Base 201 என்ற விமானத்தளத்தை அமெரிக்கப் படையினர் பாவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

6200 அடி விமான ஓடுபாதையைக் கொண்ட இத்தளம் 2019இல் $110மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் முன்னணி ஆளிலியான MQ-9 Reapersயும் மற்றும் விமானிகள் ஓட்டும் விமானங்களும் இத்தளத்தில் உள்ளன.

நடுவண் ஆபிரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பெரும் அடி.

இனி நடக்கவிருப்பவை

1. 55 நாடுகளைக் கொண்ட ஆபிரிக்க ஒன்றியம் படையினரின் ஆட்சி கலைக்கப்படுவதற்கு விதித்த இரண்டு வாரக் காலக்கெடு முடிந்து விட்டது.

Benin, Burkina Faso, Cabo, Verde, Cote de Ivoire, The Gambia, Ghana, Guinea, Nuinea-Bissau, Liberea, Mali, Niger, Nigeria ஆகிய 15 நாடுகளைக் கொண்ட Economic Community of West African States (ECOWAS) என்ற அமைப்பும் காலக் கெடு விதித்திருந்தது.

நைஜரின் அயல் நாடாகிய நைஜீரியாவின் இஸ்லாமிய அறிஞர்கள் அவை நைஜரின் குழப்பத்தை தீர்பதற்கு தமது ஒத்துழைப்பை வழங்க முன் வந்துள்ளது.

2023-08-10 வியாழக்கிழமை அவர்கள் இது தொடர்பாக நைஜரின் தற்ப்போது ஆட்சியில் இருப்பவர்களுடம் கலந்துரையாட முயல்கின்றது. நைஜருக்கு எதிரான பொருளாதாரத் தடையை அந்த அவை கண்டித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமூகம் படைகளை அனுப்புமா? 1990இல் லைபீரியாவிற்கு அனுப்பியது.

வேறும் பல உறுப்பு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடந்த போது அமைதிப்படையை அது அனுப்பியது. மேஆபொசமூகம் விதித்த காலக்கெடு 2023 ஆகஸ்ட் 6-ம் திகதியுடன் முடிவடைந்தது.

மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமுகம் பொருளாதாரத் தடையை விதித்தது.

நைஜீரியா நைஜருக்கு மின்சார விநியோகத் தடை செய்தது. நைஜருக்கு தேவையான 80% மின்சாரம் நைஜீரியாவில் இருந்தே செல்கின்றது.

ஆனால் நைஜர் தற்போது உள்ள நிலையில் மே ஆ பொ சமூகத்தின் படையினர் சென்றால் அங்கு கடும் மோதல் ஏற்பட்டு பிராந்திய அமைதிக்கு பாதகம் ஏற்படும்.

நைஜீரியா படைத் தளபதி பேச்சு வார்த்தை மூலமாகவோ அல்லது போர் மூலமாகவோ நைஜரில் மக்களாட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

புரட்சி செய்த படையினரிடையே பிளவு ஏற்பட்டுள்ளது/ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அமெரிக்காவும் பிரான்ஸும் இருக்கலாம்.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

ஆபிரிக்க மக்களின் வேணவாக்கள் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. அதன் விளைவாக கடுமையான உள்ளகப் போட்டி ஆபிரிக்க நாடுகளில் நிலவுகின்றது. திரண்ட மேற்கு நாடுகளின் ஆதரவு ஆட்சியாளரகள் கடும் சவால்களை எதிர் நோக்குகின்றார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version