கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்குகளுடன் தொடர்புடைய மூன்று இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை தொடரும் இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) குழு, அவர்களுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து, அவர்களை இந்தியர் மீது வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகளை மேற்கொண்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் சென்னையை வசிப்பவர்கள் என்றும், பெங்களூரு விவேக்நகரில் வசிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரி என்று கூறப்படும் சென்னையில் வசிப்பவரிடம் இருந்து 5.7 மில்லியன் இந்திய ரூபாய் பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர், அதே நேரத்தில் கடவுச்சீட்டு முகவரான இரண்டாவது நபரிடமிருந்து 65 கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மூன்று இலங்கையர்களை சிசிபி பொலிஸார் கைது செய்தனர், அவர்களில் இருவர் இலங்கையில் ஒப்பந்த கொலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் ஒருவருக்கு எதிராக ஐந்து கொலை வழக்குகள் இருப்பதும் ஏனையவருக்கு நான்கு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகரில் இலங்கை பிரஜைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்வதற்காக முதல் சந்தேக நபரிடமிருந்து அவர் பணமாகவும் ஒன்லைன் ஆதாரங்கள் மூலமாகவும் நிதி பெற்றதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்கள் இருவரும் செப்டெ ம்பர் 1 ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version