தற்போது நிலவும் வரட்சியால் நாட்டில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட ஏரிகள் முற்றாக வரண்டுவிட்டதாகவும், அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35-40 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
துறைக்கு கிடைத்த நிதி ஒதுக்கீட்டின்படி, ப ருவமழைக்கு முன், பழுதடைந்த குளங்களை சீரமைக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் எல் நினோ செயல்முறை காரணமாக, அடுத்த பருவத்தில் நல்ல மழை பெய்யும் என்றும், அதற்குப் பின்னர் அடுத்த பருவத்தில் மீண்டும் வரண்டு இருக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, பருவமழைக்கு முன் இந்த குளங்களை சீரமைப்பதன் மூலம் அதிக தண்ணீரை தேக்கி, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பெரிதும் தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர்.மேலும் தெரிவித்துள்ளார்.