அண்மைக் காலத்தில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த உலகின் 20 நாடுகள் இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கடந்த வருடத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பு நாடான இலங்கையின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என ஐ.நா வதிவிட இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலாளரும் இதே கருத்தைக் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version