கையடக்கத் தொலைபேசியில் உரையாடியவாறே ரயில் பாதையில் சென்றுக் கொண்டிருந்த யுவதி ஒருவர் ரயிலால் மோதப்பட்டு படுகாயமடைந்து பாணந்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (28) இரவு இடம்பெற்றுள்ளது.

கறுப்பு நிற காற்சட்டையும் மற்றும் மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த 22 வயதுடைய குறித்த யுவதி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ரயில்வே பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இரவு 7.00 மணியளவில் மருதானையிலிருந்து அளுத்கமை நோக்கி பயணித்த ரயில் பாணந்துறை நிலையத்திலிருந்து பின்வத்தை நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version