பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட, வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version