வவுனியாவில் 8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிஸாரால் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்குச் சென்ற 8 வயது சிறுவளை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று மாலை 15 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின், 8 வயது சிறுவன் வீடு சென்ற பின் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version