எல்ல கொடுவல மீரியகெலே பகுதியில் போதைப்பொருள் சோதனைக்கு சென்ற எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸாரை ஒரு குழுவினர் கத்தியால் வெட்டியதில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் படுகாயமடைந்து, பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற கடற்படை சிப்பாய் ஒருவரை அங்கிருந்த ஏனைய பொலிஸார் கைது செய்துள்ளார்.

அந்த சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள், கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version