இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இடம்பெறலாம் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் தமது வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற அச்சமும் எதிர்கட்சிகள் மத்தியில் காணப்படுகின்றது,இதன் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக

கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் அல்லது ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும ஜேவிபியை கடந்த வாரம் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது ஐக்கியப்படவேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டதாக அறியமுடிகின்றது.

தற்போதைய அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது ஜனாதிபதி தேர்தலிற்கும் இதுவே நடக்கலாம் என்பதே இரு கட்சிகளினதும் நிலைப்பாடாக காணப்படுகின்றது.

டலஸ் அலகபெருமவுடன் தனது கட்சியின் சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படலாம் என விசேடமாக எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் மக்களுக்கு வாக்களிப்பதற்கு உள்ள உரிமையை மேலும் இடைநிறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியபடவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படுவது மிகவும் ஆபத்தானது அரசமைப்பு மாற்றங்கள் மூலம் இதனை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் மக்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து இதனை மேற்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்க தரப்பு மற்றும் எதிர்கட்சிகள் அடுத்த வருட நடுப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என கருதுவது அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் புலனாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி தனது வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க என ஏற்கனவே அறிவித்துள்ளதால் இம்முறை பொதுவேட்பாளருக்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது.

மேலும் முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும்( ஜேவிபி) தங்கள் சிந்தனை மற்றும் அரசியல் கலாச்சாரங்கள் போன்ற விடயங்களில் பாரிய வேறுபாடுகளை கொண்டுள்ளன.

இதன் காரணமாக பொதுவேட்பாளர் தொடர்பில் இரு கட்சிகள் மத்தியில் இணக்கப்பாடு சாத்தியமே இல்லாதது.

எதிர்கட்சியின் பொதுவேட்பாளர் கனவு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெருமவிடமும் காணப்படுகின்றது எனினும் முக்கிய எதிர்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தீர்மானித்துள்ளதால் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.

ஆளும் கட்சி தற்போது ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்காக பணியாற்றுகின்றது, தேர்தலிற்கு முன்னர் கிராமமட்டத்தில் கட்சியை பலப்படுத்த பொதுஜனபெரமுனவின் குறிப்பிடத்தக்க அளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

நாமல்ராஜபக்சவின் தலைமையின் கீழ் இயங்கும் இக்குழுவினர் தேர்தலிற்கு முன்னர் கட்சியொன்றை ஆரம்பித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளனர்.

daily mirror

Share.
Leave A Reply

Exit mobile version