யாழ்ப்பாணம் தையிட்டி சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (29) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டமானது, புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version