தற்போது இங்கிலாந்தின் மன்னராக உள்ள சார்லஸை மணந்து, இங்கிலாந்தின் இளவரசியாக இருந்தவர் டயனா.
1997இல் விபத்து ஒன்றில் இறந்த இவர் இன்றுவரை பலராலும் நினைவு கூறப்படும் நபராக உள்ளார்.
இவரது உடைகள் மற்றும் பயன்படுத்திய பொருட்கள் இன்று வரை உலக அளவில் ஏலம் விடப்பட்டு பல கோடிகளை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டயனா அணிந்த 3 கவுன்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறும் ஏலத்தில் இந்த கவுன்கள் ஏலம் விடப்படவுள்ளன.
அதில் 3 கவுன்களை ஏலம் எடுத்த மிச்சிகனைச் சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி அண்மையில் காலமானதையடுத்து அவரிடம் இருந்த டயானாவின் உடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளன.
இந்த 3 கவுன்களில் இளவரசி டயானா பல முறை அணிந்த, முழுவதும் சிவப்பு நிறத்தில் உள்ள கவுன், அதிகப்படியாக இந்திய ரூபா மதிப்பில் 3 கோடியே 30 இ லட்சம் ரூபா வரை ஏலம் போகக் கூடும் என எதிர்ப்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.