ஆலயத்தில் பூஜையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது.

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் புதன்கிழமை (30) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூசகர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை அவரை வீதியில் வழிமறித்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் ஒன்று, அவரை வாள் முனையில் அச்சுறுத்தி அவரிடம் இருந்த ஒரு தொகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version