வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவமானது துபாய் நாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் வியாபாரியான புளுமெண்டல் ரவி என்பவரின் தலைமையில் இடம்பெற்றதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

புளூமெண்டல் ரவியின் போதைப்பொருள் வர்த்தகத்தின் நிதி முகாமையாளரான கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஒருவரையும் கொலைக்கு உதவிய குற்றத்துக்காகவும், கொலைக்கு நேரடியாக உதவிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் 17 இலட்சத்து 59,000 ரூபாய், புத்தம் புதிய 9 ஸ்மார்ட் போன்கள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 21 மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் ஆகியவற்றுடன் லொறிகளுக்கு சொந்தமான 21 வருமான அனுமதிப்பத்திரங்கள், காப்புறுதி சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு வங்கிப் புத்தகங்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version