லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிகளில் லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி எரிவாயு விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், போக்குவரத்து செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயு விலைகளிலும் சில அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version