வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க யானையொன்று சேற்றினுள் புதையுண்ட நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் மாடு மேய்க்க சென்ற கிராமவாசி ஒருவர், சேற்றில் புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்குப் போராடுவதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து மாமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், யானையை மீட்பதற்கான நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version