கொழும்பில் ​சனிக்கிழமை (02) இரவு முதல் பெய்த அடைமழை காரணமாக, பிரதான வீதிகள் உள்ளிட்ட தாழ்நிலபிரதேசங்கள் வௌ்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் முழங்கால்கள் வரைக்கும் வெள்ளநீர் தேங்கி நின்றது.

இந்நிலையில், ஒரு சில நேரங்களில் மழையுடன் காற்றும் வீசியது. இதனால், விளம்பர பலகைகள் முறிந்து விழுந்துள்ளன. மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளன.

கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த பிரதேசத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஒல்கெட் மாவத்தை பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக மட்டுப்படுத்தப்பட்டது. கொழும்பு நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மரத்தை அகற்றும் பணிகுளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version